January Month Important Days Current Affairs
ஜனவரி Important Days | ||
ஜனவரி 6 | மகாராஷ்டிராவின் பத்திரிக்கை தினம் | ③ மறைந்த பத்திரிக்கையாளர் பால்ஷாஸ்திரி ஜம்பெகரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 6 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில அரசு பத்திரிக்கை தினத்தை அனுசரிக்கிறது. ③ முதல் மராத்திய பத்திரிக்கையை தொடங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிக்காக “மராத்திய பத்திரிக்கையின் தந்தை“ என அழைக்கப்படுகிறார். |
ஜனவரி 9 | பிரவாசி பாரதிய தினம் | ③ இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரவாசி பாரதிய திவாஸைத் தொடங்கி வைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பிரவாசி பாரதிய திவாஸ் ஜனவரி 9 அன்று நடத்தப்படுகிறது. ③ 16வது பிரவாசி பாரதிய திவாஸின் கருப்பொருள் “Contributing to Aatmanirbhar Bharat” என்தாகும். ③ முதல் பிரவாசி பாரதிய திவாஸ் 2003 ஆம் ஆண்டில் நடைபெற்றது. |
ஜனவரி 10 | உலக ஹிந்தி தினம் | ③ உலக ஹிந்தி தினம் ஜனவரி 10, 2006 முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ③ இந்திரா காந்தி கடந்த 1975 ஜனவரி 10 அன்று முதல் உலக ஹிந்தி மாநாட்டை நடத்தினார். ③ பிரதமர் மன்மோகன் சிங் 2006 ஜனவரி 10 அன்று உலக இந்திய தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். ③ தேசிய ஹிந்தி தினம் செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. |
ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை | ③ தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2021 ஜனவரி 11 முதல் 2021 ஜனவரி 17 வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. ③ இந்த வாரம் முதன் முதலாக 1989ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. | |
ஜனவரி 12 | தேசிய இளைஞர் தினம் | ③ இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு 1984 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வு முதன் முதலில்கொண்டாடப்பட்டது. ③ 2021ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்த நாளை (12 ஜனவரி 1863) அனுசரிக்கப்படுகிறது. ③ தேசிய இளைஞர் தினமாக 2021 இன் கருப்பொருள்: “Channelizing Youth power for Nation Building’. |
ஜனவரி 14 | ஆயுத படைவீரர்கள் தினம் | ③ 14 ஜனவரி 53 அன்று ஓய்வு பெற்ற இந்திய ஆயதப்படைகளின் முதல் இந்தியத் தளபதி ஃபைல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா செய்த சேவைகளின் மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி ஆயுதப்படை வீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. |
ஜனவரி 15 | இந்திய இராணுவ தினம் | ③ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15ஆம் நாள் இந்திய இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2021ஆம் ஆண்டு இந்தியா தனது 73வது இராணுவ தினத்தைக்கொண்டாடப்படுகிறது. ③ 1895ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று இந்திய இராணுவம் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் இந்தியா விடுதலை அடைந்த பின்பு, 1949ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று தான் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி பதவி இந்தியரின் கைக்கு மாறியது. ③ ஆகவே அந்த நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் நாள் இந்திய இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. |
ஜனவரி 15 | திருவள்ளுவர் தினம் | ③ திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
③ தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் ஏற்று 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டு-தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. |
ஜனவரி 19 | தேசிய சாலை பாதுகாப்பு மாதம் | ③ சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் (ஜனவரி 19) தொடங்குகிறது. ③ வாகா எல்லை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய சாம்பியன்ஷிப் பாதுகாப்பு விரைவு சவால் என்ற பயணமும் தொடங்கி வைக்கப்பட்டது. |
ஜனவரி 19 | தேசிய பேரிடர் மீட்பு படை தினம் | ③ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 19 அன்று தேசிய பேரிடர் மீட்பு படை தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது. |
ஜனவரி 23 | நேதாஜி பிறந்த தினம் | ③ கடந்த 1897ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தார். அவரின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடியது. |
ஜனவரி 24 | பெண் குழந்தைகள் தினம் | ③ தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜனவரி 24-ம் தேதி நடக்கிறது. |
ஜனவரி 25 | வாக்களார் தினம் | ③ தேசிய வாக்காளர் தினம் (ஜனவரி 25) கொண்டாடப்படுகிறது. ③ இந்தியாவில் தேர்தல் ஆணையம் கடந்த 1950- ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் ஆண்டு 25-ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது. ③ கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்த தினம் ஒவ்வொரு மாநிலத்திலும் விழா கொண்டாடப்படுகிறது. ③ 2021-ம் ஆண்டு இந்தியாவின் 11-வது தேசிய வாக்காளர் தினம் (ஜனவரி 25) கொண்டாடப்பட்டு உள்ளது. ③ ‘வாக்காளர்களை அதிகாரம், விழிப்பு, தகவல்களை அறிந்தவர்களாக மாற்றுவோம்“ என்பதே நிகழாண்டின் கருப்பொருளாக உள்ளது. |
ஜனவரி 25 | ஜனவரி 25ல் தேசிய சுற்றுலா தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. | |
ஜனவரி 26 | சர்வதேச சுங்க தினம் | ③ மையக்கருத்து 2021 - “Customs bolstering Recovery, Renewal and Resilience”. ③ 1953ஆம் ஆண்டில் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் சுங்க ஒத்துழைப்பு கவுன்சிலின் தொடக்க அமர்வு நடைபெற்ற நாளின் நினைவாக உலக சுங்க அமைப்பால் இந்த நாள் நிறுவப்பட்டது. ③ 1994இல் சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் உலக சுங்க அமைப்பு என பெயர் மாற்றப்பட்டது. |
ஜனவரி 30 | உலக தொழுநோய் தினம் | ③ மையக்கருத்து - “Beat Leprosy, End Stigma and advocate for Mental Wellbeing.” |
0 Comments